அண்மைய செய்திகள்

recent
-

கவனிப்பார் அற்ற நிலையில் இலுப்பைக்கடவை ‘முதலியாங்கமம்’ கிராம மக்கள்-வீதியை சேதப்படுத்தும் டிப்பர் வாகனங்களினால் மக்கள் அவதி- Photos


மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை ‘முதலியாங்கமம்’ கிராம மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தற்போது குறித்த கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி பாதீப்படைந்துள்ளதாகவும்,அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாகம் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலுப்பைக்கடவை பிரதான வீதியில் இருந்து சுமார் 850 மீற்றர் தொலையில் முதலியாங்கமம் கிராமம் அமைந்துள்ளது.குறித்த கிராமத்தில் தற்போது வரை சுமார் 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த கிராமத்தில் அடிப்படை வசதிகளான குடி நீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லை.இதனால் இக்கிராம மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த குறித்த கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அங்கு ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

ஆனால் குறித்த கிராமத்தை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு உற்பட்ட அதிகாரிகள் யாரும் தமது கரிசனையில் பார்ப்பதில்லை.

ஆனால் அக்கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் மாத்திரமே தன்னால் முடிந்த சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தற்போது குறித்த ‘முதலியாங்கமம்’ கிராமத்திற்குச் செல்லும் பிரதான பாதை ஊடக மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்களினால் இக்கிராம வீதி பழுதடைந்து செல்கின்றது.

தற்போது மழைக்காலம் என்பதினால் மண் ஏற்றிக்கொண்டு வரும் டிப்பர் வாகனம் குறித்த வீதியில் புதைந்து வீதியை சேதப்படுத்துகின்றது.

இதனால் மக்கள் நடந்து அல்லது துவிச்சக்கர வண்டிகளினால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அத்தோடு குறித்த பிரதான வீதிக்கு அருகாமையில் தற்போது குளம் ஒன்றிற்கான அனைக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

-குறித்த அனைக்கட்டு வீதியின் ஓரத்தையும் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் குறித்த வீதி சிறிய வீதியாக காணப்படுவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று(19) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஞா.குணசீலன் குறித்த பகுதிக்குச் சென்று நிலையைமை அவதானித்தார்.

இதன் போது இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய அதிகாரி,மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த வீதியூடாக செல்லும் டிப்பர் வாகனத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாந்தை மேற்கு பிரதே செயலாளருக்கு தொலைபேசியூடாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஞா.குணசீலன் தெரியப்படுத்தினார்.

அத்துடன் குறித்த அனைக்கட்டு வீதியை ஆக்கிரமித்து சேதப்படுத்தாத வகையில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண சபை உறுப்பினர் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.










கவனிப்பார் அற்ற நிலையில் இலுப்பைக்கடவை ‘முதலியாங்கமம்’ கிராம மக்கள்-வீதியை சேதப்படுத்தும் டிப்பர் வாகனங்களினால் மக்கள் அவதி- Photos Reviewed by NEWMANNAR on October 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.