அண்மைய செய்திகள்

recent
-

மறைந்த தமிழினியின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் இறுதி அஞ்சலி.-Photos


புற்று நோயினால் பாதிக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) மரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழினி என அழைக்கப்படும் சிவகாமினியின் பூதவுடல் கிளிநொச்சி சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு இன்று திங்கட்கிழமை(19) காலை முதல் மக்கள், அரசியல் பிரமுகர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள்,முன்னாள் போராளிகள்,பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரது இறுதி கிரிகைகள் நாளை செவ்வாய்க்கிழமை(20) மதியம் இடம் பெறவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.







மறைந்த தமிழினியின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலர் இறுதி அஞ்சலி.-Photos Reviewed by NEWMANNAR on October 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.