அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் - குஞ்சுகுளம் புதிய பாலத்திற்கான வெள்ளோட்டம்- Photos

புதிய பாலத்தினை திறந்து வைக்கும் முகமாக அதன் தரத்தினை அறிய இன்று மன்னார் குஞ்சுகுளம் பாலத்திற்கான வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுள்ளது.
மன்னார் குஞ்சுகுளம் பாலமானது புதிதாக நிர்மாணிக்கபட்டு வேலைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், குறித்த பாலத்தை மக்கள் பாவனைக்கு விடப்படுவதற்கு முன்னர்  பரீட்சார்த்தமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய இன்று  காலை ஆரம்பித்தவைத்தது வைத்து பார்வையிட்டதுடன். பாலத்தின் தன்மை மற்றும் மேலும் அப்பகுதியில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதற்கென அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 35 மில்லியன்கள் ஒதுக்கபட்டு பால வேலைகள் நிறைவு பெற்றுள்ளன.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியுடன் இணையும் குறித்த குஞ்சுகுளம் வீதியில் கடந்த காலங்களில் அமைக்கபட்டிருந்த பாலம் தாழ்வாக காணப்பட்டதால், மல்வத் ஓயா
வெள்ளப்பெருக்கெடுக்கும் காலங்களில் வீதிக்கு குறுக்காக வெள்ளம் ஊடறுத்து சென்று குறித்த வீதி முழுவதுமாக நீரில் மூழ்குவது வழமையாகும்.

இதனால் குஞ்சுக்குளம், மாதா கிராமம், பெரிய முறிப்பு ஆகிய மூன்று கிராமங்களும் நீரால் சூழப்பட்டு குறித்த கிராமங்களுக்குச் செல்லும் வீதிகள் அனைத்தும் துண்டிக்கப்படும் நிலையில், அக் கிராம மக்களுக்கான உணவுகளை உலங்குவானூர்தி மூலமாகவே வழங்கப்பட்டுவந்தது.

இதனால் ஆண்டு தோறும் இடம் பெறும் வெள்ள அனர்த்தத்தினால் 800 குடும்பங்கள் பாதிக்கபட்டு வந்தன.

கடந்த 2014ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் மழைக் காலம் ஆரம்பிக்கவுள்ளதால் அதற்கு முன் குறித்த பாலத்தை வைபவரீதியாக திறந்து வைப்பதற்கு பரீட்சார்த்தமாக இன்று இப்பாலத்திற்கு ஒரு சில வாகனங்கள் அனுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அனர்த்த மகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர். றியாஸ், முருங்கன் நீர்பாசன பொறியியலாளர் மையூரன், மன்னார் வீதி அபிவிருத்தி
திணைக்களத்தின் பொறியியலாளர் ரகு குஞ்சுகுளம், அருட்தந்தை உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர்.





மன்னார் - குஞ்சுகுளம் புதிய பாலத்திற்கான வெள்ளோட்டம்- Photos Reviewed by NEWMANNAR on October 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.