மதவாச்சி மன்னார் வீதியில் நடைபெற்ற விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய சாரதி
மதவாச்சி மன்னார் வீதியில் 20-10-2015 காலை நடைபெற்ற விபத்தில் மீன் ஏற்றி செல்லும் குளிருட்டும் வாகனம் ஒன்று உயிலங்குளம் கள்ளியட்டகாடு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனம் மதவாச்சியில் இருந்து வந்து கொண்டிருந்தபோது உயிலங்குளம் கள்ளியட்டகாடு பகுதியில் கட்டாக்கலி மாடு ஒன்று வீதியின் குறுக்காக பாய்ந்ததினால் வாகனத்தின் சாரதி கட்டுபாட்டை இழந்தநிலையில் வாகனம் வீதியை விட்டு விலகி பற்றை காட்டுக்குள் பாய்ந்து சென்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனம் பற்றைகாட்டினுள் மாட்டிகொண்டதால் வாகனத்தை ஒட்டி சென்ற சாரதி வாகனத்தில் இருந்து வெளியில் வரமுடியாத நிலையில் பல நேரம் வாகனத்திற்குள்ளேயே கடந்துள்ளார்.
நிலைமை தொடர்பாக அறிந்து கொண்ட ஊர்மக்கள் குறித்த வாகனத்தையும் வாகனத்தின் சாரதியையும் மிட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய சாரதிக்கு தெய்வதீனமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பியுள்ளார்.
மதவாச்சி மன்னார் வீதியில் நடைபெற்ற விபத்தில் தெய்வாதீனமாக உயிர்தப்பிய  சாரதி
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
October 21, 2015
 
        Rating: 
      

No comments:
Post a Comment