பள்ளிக்கு சென்று படிக்கும் 14 வயது அப்பா: குழந்தையை பராமரிக்கும் 27 வயது தாய்
அர்ஜெண்டினாவில் 14 வயதில் குழந்தைக்கு தந்தையான மாணவன் பள்ளிக்கு சென்று தனது படிப்பையும் கவனித்து வருகிறான்.
அர்ஜெண்டினாவின் Mendoza மாநிலத்தின் San Rafael நகரத்தில் வசித்து வரும் Lucia Desiree Pastenez(29) என்ற பெண்மணியின் இளைய மகன்(14) பள்ளியில் பயின்று வருகிறான்.
இந்நிலையில், திருமணம் செய்து குழந்தை பெற்றெடுத்துள்ள இம்மாணவன், குழந்தையை பராமரித்துக்கொண்டே பள்ளிக்கும் சென்றுவருகிறான்.
இதுகுறித்து இம்மாணவனின் தாயார் கூறுகையில், எனது மகனை சிறுவயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டாம், ஏனெனில் சிறுவயதில் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, அக்குழந்தைகளை பராமரிக்காமல் எத்தனையோ பேர் விட்டுவிடுகின்றனர் என்று அறிவுரை வழங்கினேன்.
ஆனால் அவன் என்னுடைய பேச்சை கேட்கவில்லை, தற்போது எனது மருமகள் அவளது தாய்வீட்டில் வசித்து வருகிறாள், தற்போது குழந்தையை பராமரிப்பதற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
பள்ளிக்கு சென்று படிக்கும் 14 வயது அப்பா: குழந்தையை பராமரிக்கும் 27 வயது தாய்
Reviewed by Author
on
November 10, 2015
Rating:
Reviewed by Author
on
November 10, 2015
Rating:


No comments:
Post a Comment