அண்மைய செய்திகள்

recent
-

வேற்றுகிரகவாசியா? விலங்கினமா? புகைப்படத்தை வெளியிட்டு முகநூல் பயன்பாட்டாளர்களை சிந்திக்கவைத்த பெண்...


கலிபோர்னியாவில் பெண்மணி ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உயிரினம் ஒன்று இறந்துகிடந்ததை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த Gianna Peponis என்ற பெண்மணி இரவு 10.30 மணியளவில் வீட்டின் பின்புற பகுதிக்கு சென்றபோது, இளஞ்சிவப்பு நிறத்தில் பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உயிரினம் ஒன்று கிடந்துள்ளது.

இதனை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட Gianna, நான் பார்க்கும்போது இது இறந்துகிடந்தது, இது என்னவென்று தெரியவில்லை, இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த முகநூல் பயன்பாட்டாளர்கள், இது வேற்றுகிரகவாசி என்றும், சிலர் இது கரு என்றும், இன்னும் சிலர் இது ஒரு விலங்கினம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு நபர், இது பாதிவளர்ச்சியடைந்த மானின் கருவாகும், ஏனெனில் இதன் பாதி மூக்கு மற்றும் பின்புற பகுதி விலங்குகளால் மெல்லப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தினை பார்த்த பிற பயன்பாட்டாளர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேற்றுகிரகவாசியா? விலங்கினமா? புகைப்படத்தை வெளியிட்டு முகநூல் பயன்பாட்டாளர்களை சிந்திக்கவைத்த பெண்... Reviewed by Author on November 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.