ஒயிட்வாஷ்' ஆனது மேற்கிந்திய தீவுகள் அணி: 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி...
இலங்கை- மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துப்பெடுத்தாட களமிறங்கியது.
தொடக்க வீரர் சார்லஸ் (4), பெல்ச்சர் (6) ஒற்றை ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிளாக்வுட் (2), பிராவோவும் (4) நிலைக்கவில்லை. ராம்தின் 4 ஓட்டங்களில் நடையை கட்டினார்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 52 ஓட்டங்களுக்கே 5 விக்கெட்டை இழந்தது. பின்னர் நிதானமாக ஆடிய சாமுவேல்ஸ் 110 ஓட்டங்கள் குவித்தார்.
ஆட்ட நேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பில், மலிங்கா, மெண்டிஸ், சமீரா, லக்மல் தலா 2, விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 207 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பெரேரா 50 ஓட்டங்களுடனும் டில்ஷான் 21 ஓட்டங்களுடன் வெளியேற,
தொடர்ந்து வந்தவர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றுள்ளனர். ஆட்டத்தின் முடிவில் 19 ஓட்டங்களின் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
ஒயிட்வாஷ்' ஆனது மேற்கிந்திய தீவுகள் அணி: 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி...
Reviewed by Author
on
November 13, 2015
Rating:
Reviewed by Author
on
November 13, 2015
Rating:


No comments:
Post a Comment