மன்னாரில் முத்தான வியர்வை விற்பனைக்கண்காட்சி ----27-11-2015
மன்னாரில் முத்தான வியர்வை விற்பனைக்கண்காட்சி --27-11-2015 இன்று காலை 10-30 மணிக்கு மன்னார் மாவட்டச்செயலகத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக…..
எம்.வை.எஸ்.தேசப்பிரிய அரசாங்க அதிபர் மன்னார்
அ.ஸ்ரான்லி டிமெல் மேலதிக அரசாங்க அதிபர் மன்னார்
க.சசிரதன் பணிப்பாளர் திவிநெகும மன்னார் மாவட்டம்
இவர்களுடன் நிர்வாக அலுவலர்கள் திட்டமிடல் பணிப்பாளர்கள்
காணி-இறப்பு பிறப்பு பதிவாளர்கள் வனத்திணைக்கள ஆணையாளர் கணக்காளர்கள் பிரதேசசெயலாளர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள் சமூகஅபிவிருத்திப்பணியாளர்கள் பயனாளிகள் பொதுநிலையினர் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்
இந்நிகழ்வின் பிரதான நோக்கம்....
உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவித்தல்
சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல்
வருமான அதிகரிப்பு
பொருளாதார மேம்பாட்டு-முதலீடு
திட்டங்களை உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான கண்காட்சிகள் மூலம் எமது மாவட்டம் வளமாகும் என்பதோடு 5 பிரதேச பிரிவுகளில் இருந்தும். திறமையான உற்பத்தியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு மாவட்டம் தேசிய மட்டம் என அவர்களை இனம் கண்டு விருதினையும் பாராட்டுககளையும் வழங்குவது ஊக்கமளிக்கும் செயலாகும் இன்னும் அபிவிருத்திகளை பெருக்குவதும் வாழ்க்கை பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கு பெரும் சான்றாக அமையும்…
இந்நிகழ்வை திறம்பட தொகுத்து வழங்கியவர் ஏ.ஜே.ஜேக்கப் மாவட்ட சமூக அபிவிருத்தி விடைய முகாமையாளர்….
மன்னாரில் முத்தான வியர்வை விற்பனைக்கண்காட்சி ----27-11-2015
Reviewed by Author
on
November 27, 2015
Rating:

No comments:
Post a Comment