அண்மைய செய்திகள்

recent
-

நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் மன்னார் மடுக்கரை அ.த.க. பாடசாலைக்கு 4 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கல்வி ஊக்குவிப்பு உதவிகள்.photos

இலண்டன் நம்பிக்கை ஒளி தன்னார்வ தொண்டு  நிறுவனத்தினால் மன்னார் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையில் கல்வி கற்கும்  250 மாணவர்களுக்கு 4 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் பாதணிகளும் புத்தகப் பைகளும் இலவசமாக நேற்று வியாழ்க்கிழமை(12) வழங்கி வைக்கப்பட்டது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமமே மடுக்கரை. இக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக இலண்டன் நம்பிக்கை ஒளி தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனமாக இலங்கையில் செயற்பட்டுவரும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை ஊடாக 250 புத்தகப்பைகளும் 250 பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் சேவையாளர்களாகிய ப. சுபாஸ்கரன், சி.சிவகாந்தன், கோ. ரூபகாந், மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு மடுக்கரைப் பகுதியில் வறுமையில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவித்தனர்.

(மன்னார் நிருபர்)

(13-11-2015)













நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் மன்னார் மடுக்கரை அ.த.க. பாடசாலைக்கு 4 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் கல்வி ஊக்குவிப்பு உதவிகள்.photos Reviewed by NEWMANNAR on November 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.