அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்ரிப்பு.(Photos)


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தார்மிக அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அழைப்பு விடுத்த நிலையில் இன்று(13) வெள்ளிக்கிழமை மன்னாரில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பஸார் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.தனியார் போக்குவரத்துச் சேவைகள் மன்னார் மாவட்டத்தில் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்ற போதும் மாணவர்கள் சமூகமளிக்கவில்லை.இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை.எனினும் மன்னார் அரச போக்குவரத்துச் சேவைகள் இடம் பெற்று வருவகின்றது.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களை தவிர ஏனைய தமிழ்,முஸ்ஸிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை எது வித நிபந்தனைகளும் இன்றி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செயய வேண்டும் என்பதனை வழியுறுத்தி குறித்த ஹர்த்தால் வடக்கு கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அனு;ரிக்கப்பட்டு வந்தது.
இந்த வகையிலே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வழியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



(மன்னார் நிருபர்)








(13-11-2015)
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்ரிப்பு.(Photos) Reviewed by NEWMANNAR on November 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.