அண்மைய செய்திகள்

recent
-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு காணமற்போனவர்களின் குடும்பத்தினருடனான கலந்துரையாடல் மன்னாரில்….

    இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் விஷேட உறுப்பினர்களைக்கொண்ட குழுவொன்று வருகை தந்து மன்னாரிற்கு முதற்தடவையாக இன்று மதியம் 2-00மணிக்கு ஞானேதயம் கீரிக்கு  விஐயத்தினை மேற்கொண்டது…
இவ்விஐயத்தின் போது பலவந்தமாகவும் தன்னிச்சையற்ற வகையில் காணமற்போகச்செய்யப்பட்டவர்களின் உண்மை நிலை அவர்களின் இருப்பிடம் என்பனவற்றை கண்டறிவதோடு அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டோரின் முறைப்பாடுகளை தகவல்களைப்பெற்று பாதிக்கப்பட்டவர்களிற்காக அரசாங்கத்திடம் பொதுவான நன்மைபயக்ககூடிய வகையில் பாதுகாப்பான செயற்பாடுகளை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் பணியைச் செய்கின்றது.

பயமுறுத்தல்கள் கடத்தல் துன்புறுத்தல் கப்பம்கோருதல் பயங்கரவாததடைச்சட்டம் போன்ற காரணங்களைக்காட்டி இதுவரையும் காணமல் போனவர்கள் பற்றிய உண்மை நிலவரம்  தெரியாமல் ஏங்கித்தவிக்கும் எமக்கு இதுவரையும் எந்தவிதமான நல்ல முடிவும் கிடைக்கவில்லை…

ஒவ்வொரு முறையும் எமது கோரிக்கைகளை கவலைகளை கண்ணிரை கேட்டறிந்து கொள்ளும் அமைப்புக்கள் மனித உரிமை ஆர்வலர்கள் காப்பாளர்களின் முயற்சியால் வெளியுலகிற்கு தெரிய வந்தாலும் நிரந்தரமான தீர்வுவொன்றையே எதிர்பார்த்து நிற்கின்றோம்.பதியப்பட்ட 220 பேரிற்கு மேலாக காணமல்….

போனவர்களின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியவாறு சுடும் வெயிலிலும் நின்று கொண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு பிரதி நிதி குழு வாகனம் வரும் போது கைகளில் ஏந்தியிருந்த புகைப்படங்களை மிக அருகில் காட்டியபோது மிகவும் பரிதாபமாகவே இருந்தது…












 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு காணமற்போனவர்களின் குடும்பத்தினருடனான கலந்துரையாடல் மன்னாரில்…. Reviewed by Author on November 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.