அண்மைய செய்திகள்

recent
-

மகிந்த நெஞ்சில் குத்தினார்! மைத்திரி முதுகில் குத்துகிறார்: கைதிகள் விடுதலை தொடர்பாக பா.அரியநேத்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை மைத்திரி அரசு மீண்டும் ஏமாற்றிவிட்டது இது இனவாத்த்தின் உச்சக்கட்டம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதாக 28 தமிழ் கைதிகள் நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு சட்டமாதிகாரியின் முடிவு இல்லையென கூறி எதிர்வரும் நவம்பர் 24 வரை அவர்களை திரும்பவும் சிறைகளுக்கு அனுப்பப்பட்டமை தொடர்பாக கருத்து கூறிய அரியநேத்திரன் பிணையில் விடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் நிமிர்த்தமாக சென்று நாடு திரும்பும் போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து 2013, கைது செய்யப்பட்டவர்களும் வேறு சிலருமே.

உண்மையில் பலவருடங்களாக தடுத்து வைக்கப்பட்ட எவரையும் இன்று (11/11/2015) நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லவில்லை.

ஆனால் ஏதோவொரு வகையில் அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி கைதிகளையாவது பிணையில் விடுதலை செய்யாமல் திரும்பவும் கால நீடிப்பு செய்தமை முழு உலகத்தையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்க முடிகிறது.

கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளின் நெஞ்சில் ஜனாதிபதி மகிந்த நேரடியாக குத்தினார் ஆனால் ஜனாதிபதி மைத்திரியோ தமிழ் தலைமைகளின் முதுகில் மறைமுகமாக குத்துகிறார் என்பது மிகத்தெளிவாக கோடிட்டு காட்டுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக கடந்ந 2004ம் ஆண்டு தொடக்கம் பல தடவைகள் அனைத்து சிறைகளுக்கும் நேரடியாக சென்று பார்த்து அவர்கள் விடுதலைக்காக பல முயற்சிகள் மேற்கொண்டோம்.

அப்போது ஏறக்குறைய 800 தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர். அவர்களில் படிப்படியாக பலர் விடுதலை செய்யப்பட்டு தற்போது 217 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே உள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டும் என ஐனாதிபதி மைத்திரியுடன் தலைவர் சம்பந்தன் ஐயா கடந்த10 மாதங்களாக கதைத்த போதும் ஜனாதிபதி சிரித்துக் கொண்டே சம்பந்தன் ஐயாவை ஏமாற்றுவதை இந்த சம்பவம் தெளிவாக காட்டுகின்றது.

புதிய ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்த தமிழ்மக்களுக்கு அவர்தந்த தீபாவளி பரிசு தமிழ் அரசியல் கைதிகளை ஏமாற்றியது தான்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13/11/2015) வடகிழக்கு முழுவதும் மேற்கொள்ளும் பூரண ஹர்ததால் கடையடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவை வடக்கு கிழக்கு வாழ் மக்கள் வழங்கும்படியும் அரியம் மேலும் கூறினார்.
மகிந்த நெஞ்சில் குத்தினார்! மைத்திரி முதுகில் குத்துகிறார்: கைதிகள் விடுதலை தொடர்பாக பா.அரியநேத்திரன் Reviewed by NEWMANNAR on November 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.