தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசிற்கு வழங்கிய கால அவகாசத்தை த.தே.கூ கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்-அனுராதபுர சிறையில் உள்ள அரசியல் கைதிகள்.
தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தமது விடுதலை குறித்து அரசிற்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் இவ்விடையத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.என அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ,மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களின் செயலாளர் அருட்தந்தை முரளி மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை(17) மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன் போதே அரசியல் கைதிகள் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது அரசியல் கைதிகளை நாங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் நேரில் சென்று சந்தித்தோம்.
அதன் போது அவர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அரசிற்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும்,அதன் பின்பு மீண்டும் எங்களை அவர்கள் ஏமாற்றுவார்கள் எனின் உண்ணாவிரதம் இன்றி பாரிய அளவில் எனது போராட்டத்தை மேற்கொள்வோம்.என தெரிவித்தனர்.
அதை விட பிணை வழங்கப்படுபவர்கள் அல்லது புனர்வாழ்வளிக்கப்படுபவர்களது பெயர் விபரங்களை கவனத்தில் எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிணையில் விடப்பட்ட 31 பேரில் பலர் சட்ட விரோதமானவர்கள் என கருதப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் விடுதலை செய்யப்பட்ட 8 பேரில் ஒருவர் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் புனர்வாழ்வு அழிப்பதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பார்வையிட்டு அவை அரசியல் கைதிகளினுடையதா? என பரிசோதித்தன் பின் புனர்வாழ்வளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் உற்பட பலர் தங்களின் விடுதலைக்காக பல்வேறு வகையில் குரல் கொடுத்ததாகவும் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.
எனவே இந்த உண்ணாவிரதத்தை கைவிட்டது முற்று முழுதாக என கருத வேண்டாம்.
நாங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அரசிற்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம்.எனவே இவ்விடையத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.என அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்ததாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசிற்கு வழங்கிய கால அவகாசத்தை த.தே.கூ கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்-அனுராதபுர சிறையில் உள்ள அரசியல் கைதிகள்.
Reviewed by NEWMANNAR
on
November 17, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2015
Rating:




No comments:
Post a Comment