பெண்கள் மர்மமானவர்கள்.......
பிரபஞ்சத்தின் மாபெரும் மர்மமாக கருதப்படும் கருந்துவாரத்தை விடவும் பெண்களே மிகவும் பெரிய மர்மமாகவுள்ளதாக உலகப் பிரபல பிரித்தானிய பௌதிகவியலாளரான ஸ்டீவன் ஹவ்கிங், தெரிவித்துள்ளார்.
பௌதிகவியலில் கலாநிதி பட்டம் பெற்று மர்மமாகவுள்ள பல பௌதிகவியல் செயற்கிரமங்களுக்கு தன்னால் விடை அளிக்க முடிந்த போதும், பெண்களின் மனதில் என்ன உள்ளது என்பதைக் கண்டறிவது தொடர்ந்தும் தனக்குப் பாரிய மர்மமாகவே உள்ளதாக அவர் கூறினார்.
எதிர்பாலினர் (பெண்கள்) மிகப் பெரிய மர்மமாக, புதிராக தனக்கு தோன்றுவதாக தெரிவித்த அவர், அந்த மர்மம் தீர்வு காணப்படாத புதிராகவே தொடர்ந்து இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரயோக கணித மற்றும் பௌதிகவியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் ஹவ்கிங் இரு தடவைகள் திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவராவார்.
அவர் 2012 ஆம் ஆண்டில் தனது 70 ஆவது பிறந்த தினத்தின் போது, தான் பெண்களைப் பற்றி சிந்திப்பதற்கே அதிக நேரத்தைச் செலவிடுவதாக ஒப்புக் கொண்டிருந்தார்..
பெண்கள் மர்மமானவர்கள்.......
Reviewed by Author
on
November 26, 2015
Rating:
Reviewed by Author
on
November 26, 2015
Rating:


No comments:
Post a Comment