நல்லாட்சியில் மக்களுக்கு நல்லதே நடக்கும் : கிளிநொச்சியில் அமைச்சர் மனோ கணேசன்.....
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பயங்கரவாதம் மற்றும் அரச பயங்கரவாதம் இரண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இது மஹிந்த ஆட்சியல்ல; மைத்திரி, ரணில், மனோகணேசன் ஆட்சி; இது நல்லாட்சி; இந்த ஆட்சியில் மக்களுக்கு நல்லதே நடக்கும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆட்சியில் வெள்ளைவான் இல்லை, காணாமல்போதல் இல்லை, கடத்தல் இல்லை, ஊடகவியலாளர்களை நீங்கள் எங்களிடம் கேள்விகள் கேட்டுவிட்டு செல்லும்போது உங்களை புலனாய்வாளர்கள் பின் தொடரமாட்டார்கள்.
எனவே இந்த நல்லாட்சியில் தமிழ் மக்களுக்கு நன்மைகளே கிடைக்கப்பெற்று வருகின்றன. எல்லாம் கிடைத்துவிட்டது என்று நான் கூறமாட்டேன். மக்கள் இந்த நல்லாட்சியில் நிறையவே எதிர்பார்த்தார்கள். அவர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாது போனாலும் படிப்படியாக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றோம்.
தை பிறப்பு என்பது தை மாதம் 14 திகதிதான் பிறக்கும். அப்போதுதான் வழி பிறக்கும் என்பார்கள். தற்போதைய ஆட்சியில் காணிகள் விடுவிப்பு. அரசியல் கைதிகள் விடுவிப்பு. என்று எல்லாம் நல்லதே நடக்கிறது தொடர்ந்தும் அவ்வாறே நடக்கும். முழுமையான மாற்றம் ஏற்படாது விட்டாலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நல்லாட்சியில் தமிழ் மக்களுக்குரிய குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய பங்கை நாம் பெற்றுத் தருவோம்.
கடந்த ஆட்சியில் உள்ள அமைச்சரவையில் எந்த அமைச்சருக்கும் முதுகெலும்பு இல்லை. அமைச்சரவையில் இராணுவம் கையகப்படுத்தியிருக்கும் காணிகளா விடுவிப்பது பற்றி யாரேனும் அமைச்சர் பேசியிருந்தால் ''வாய் மூடு'' என்றே பதில் வந்திருக்கும். ஆனால் தற்போதைய அமைச்சரவையில் அவ்வாறு இல்லை. நாங்கள் முதுகெலும்பு உள்ள அமைச்சர்கள் ஆவோம்.
நாட்டில் தமிழ்இ சிங்கள மொழிகள் ஆட்சிமொழியாகவும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் காணப்படுகின்றன. சிங்கள மொழி போன்று தமிழ்மொழிக்கும் உரிய சமத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து மக்களிடையேயும் சகவாழ்வு இருக்க வேண்டும் அதுவே இன நல்லிணக்கத்திற்கான அடித்தளம் எனவும் குறிப்பிட்டார்
நல்லாட்சியில் மக்களுக்கு நல்லதே நடக்கும் : கிளிநொச்சியில் அமைச்சர் மனோ கணேசன்.....
Reviewed by Author
on
November 20, 2015
Rating:

No comments:
Post a Comment