அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...


பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நேற்று மேற்கொண்ட தாக்குதல் குறித்து உலமா கட்சி ஏற்பாட்டில் ஜாதிக பலய அமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

இலங்கையின் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து அண்மையில் ஜாதிக பலய எனும் கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் தலைவர் ஆரியவங்ச திசாநாயக்க மற்றும் உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் ஆகியோர் இந்த அமைப்பில் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் தங்கள் கல்விக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நேற்று மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை ஜாதிக பலய வன்மையாகக் கண்டித்துள்ளது.

அத்துடன் ஜாதிக பலய அமைப்பின் ஏனைய உறுப்பினர்களான சரத் மனமேந்திர, ஜயந்த குலதுங்க ஆகியோருடன் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் உள்ளிட்டோர் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளனர்.

பொலிஸாரின் அராஜகம் கட்டுப்படுத்தப்பட்டால் நல்லாட்சி என்பதற்கான அர்த்தம் கெட்டுப்போகும் என்றும் ஜாதிக பலய முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு... Reviewed by Author on November 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.