அண்மைய செய்திகள்

recent
-

நாளொன்றுக்கு 650 இற்கு அதிகமான கருக்கலைப்புக்கள் : சட்டவிரோத நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை...


இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ். அருள்குமரன், கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளதாகவும், கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரசாங்க வைத்தியசாலைகளில் நடந்தபோதிலும் சில சட்டவிரோத நிலையங்கள் இதற்காக செயற்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 650 இற்கு அதிகமான கருக்கலைப்புக்கள் : சட்டவிரோத நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை... Reviewed by Author on November 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.