மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.=படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் அங்கத்தவர்களில்,தெரிவு செய்யப்பட்ட சுமார் 06 பேருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு நேற்று(24) செவ்வாய் கிழமை மாலை 4:30 மணியளவில் மன்னார் எமில் நகரில் உள்ள மன்னார் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
விசேட தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சங்க அங்கத்தவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தமது வருடாந்த குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்,,,
ஏற்க்கனவே சங்கத்துக்கு விஜயம் செய்த வேளையிலே தாம் வாக்குறுதி வழங்கியதன் அடிப்படையிலேயே இந்த துவிச்சக்கர வண்டிகளை தற்போது வழங்குவதாகவும், அது மட்டுமல்லாது சங்க நிர்வாகம் ஏற்க்கனவே கோரியிருந்ததன் அடிப்படையில் சங்கத்தின் கட்டிட தள வேலைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த ஆண்டு தமது ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 2 இலட்சத்து 50.000 ஆயிரம்(2,50,000) ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் எனவே தளத்துக்கான வேலைகளை விரைவில் முடிக்குமாறும், அத்தோடு எதிர்வரும் ஆண்டுகளில் தம்மால் முடிந்த சகல உதவிகளையும் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும், சங்க அங்கத்தவர்கள் ஒற்றுமையோடு செயற்ப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.=படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
November 25, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 25, 2015
Rating:









No comments:
Post a Comment