மன்னாரில், பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள்! சமூக ஆர்வலர்கள் கவலை...
பெற்றோரை ஏமாற்றி பாடசாலை மாணவர்கள் செய்யும் குறும்பு செயற்பாடுகளால் மன்னார் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மன்னாரில் பெற்றோர்களை ஏமாற்றி தனியார் வகுப்புகளுக்கு செல்வதாக கூறி செல்லும் மாணவர்கள் செய்யும் பொறுப்பற்ற குறும்பு செயற்பாட்டால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பல கஸ்டங்களுக்கு மத்தியில் தொழில்புரிந்து அதில் கிடைக்கும் வருமானத்தை பிள்ளைகளின் கல்விக்காக செலவிடும் பெற்றோரின் நம்பிக்கையை சிதைத்து தற்போதைய இளைய சமுதாயத்தினர் செயற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பிள்ளைகளின் நடவடிக்கைகளை மிக அவதானமாக கவனித்து இளைய மாணவர் சமூகத்தை சீர்ப்படுத்த பெற்றோர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் தூரக் கிராமங்களில் இருந்து மன்னார் தனியார் கல்வி நிலையங்களுக்கு வகுப்புகளுக்காகச் செல்லும் உயர்தர மாணவ சமூகத்தில் ஒரு சிலர் கல்விநிலையத்திற்கு செல்வதாக சொல்லி மன்னார் தனியார் பேருந்து நிலையத்திற்கு வந்து ஆட்கள் இல்லாத பேருந்துகளில் ஏறி அங்குள்ள நேரசூசிகை அடிப்படையில் பயணத்திற்கு காத்து நிற்கும் பேருந்துகளில் காதல் எனும் போர்வையில் நீண்டநேரம் செலவிடுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இங்கு வரும் இளவட்டங்கள் ஆட்கள் இன்றி நேரசூசிகை அடிப்படையில் காத்து நிற்கும் பேருந்துகளில் சோடியாக காதல் வசப்பட்டு மாணவ மாணவிகள் எதிர்காலத்தை தொலைப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பேருந்திற்காக நேரம் வரும் போது அப் பேருந்தில் இருந்து இறங்கி மற்றைய பேருந்துக்கு மாறி நீண்டநேரம் கதைத்து செலவிடுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தனியார் வகுப்புகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பாக விழிப்புடன் செயற்பட்டு இவ்வாறான செயற்பாட்டை தடைசெய்து இளம் சமூதாயம் சீர்கெட்டுபோகாத வகையில் அவர்களை கண்டித்து புத்திமதிகள் சொல்லி மாணவ மாணவிகளை சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மன்னாரில், பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள்! சமூக ஆர்வலர்கள் கவலை...
Reviewed by Author
on
November 01, 2015
Rating:
No comments:
Post a Comment