அண்மைய செய்திகள்

recent
-

இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை


இலங்கையின் இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பத்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பிலான விசேட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் துணையுடன் தங்கள் குடும்பத்தவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியும்.

நீதியும் நஷ்டஈடும் கிடைக்கும் என காணமற்போனவர்களின் குடும்பத்தவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஐக்கிய நாடுகள் குழுவின் விஜயம் மெய்ப்பிப்பதாக அமைய வேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணமற்போனவர்களின் குடும்பத்தவர்களை ஐக்கிய நாடுகள் குழு அவதானமாக கேட்டறியும் எனவும், மன்னிப்புச்சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக இன்னமும் கடும் சவால்கள் காணப்படுவதை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டிய தேவை உண்டு என்பதை ஐக்கிய நாடுகள் குழு ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இரகசிய முகாம்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை Reviewed by NEWMANNAR on November 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.