அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) வடக்கு–கிழக்கு இணைந்த பகுதிகளில் பூரண ஹர்த்தாலை அனுஸ்ரிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,,,,
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இணைந்த வடக்கு கிழக்கு பூராகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி பூரண ஹர்த்தாலை அனுஸ்ரிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
வர்த்தக சங்கம்,தனியார் போக்குவரத்துச் சங்கம் ,மற்றும் முஸ்ஸீம் மக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
குறிப்பாக வடக்கு கிழங்கில் உள்ள மீனவ சங்கங்கள்,பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றினைந்து எமது அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒரு நாள் ஹர்த்தாலை இணைந்த வடக்கு கிழக்கு பூராகவும் நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என கேட்டுக்கொள்ளுகின்றேன்.
நாங்கள் எமது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் காட்டுகின்ற ஆவர்வம் அவர்களின் விடுதலைக்கு வித்திடுகின்ற அல்லது விடுதலையை கொண்டு வருகின்ற வாய்ப்பை ஏற்படுத்தும்.
எனவே சர்வதேசத்தின் நிலையிலும் எமது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் நாங்கள் சர்வதேசத்திடம் கோரிக்கை விட முடியும்.எனவே எமது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) இணைந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தாலை அனுஸ்ரிப்பதற்கு அணைவரும் ஆதரவை வழங்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்ளுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
November 10, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 10, 2015
Rating:


No comments:
Post a Comment