அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினரின் ஏற்பாட்டில…மாணவர்களுக்கு….


மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினரின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 5பிரதேசங்களை உள்ளடக்கியதாக பெற்றோரை இழந்த மாணவமாணவிகளுக்கு பாடசாலை கற்றறல் உபகரணங்கள் ஆடைகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு 15-11-2015 அன்று காலை 11 மணிக்கு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது ...

இவ்வைபவம் ஆனது தெரிவு செய்யப்பட்ட 76 மாணவர்களை உள்ளடக்கியதாக அமைந்தது. வருடாவருடம் நடைபெறும் இந்நிகழ்வு நெதர்லாந்தைச்சேர்ந்த மவுஸ் அவரின் துனைவியார் கேட்ஸ்  குடும்பத்தினரும் மற்றும் நலன்விரும்பிகளின் நிதிப்பங்களிப்போடு 2001-2015 வரை நடைபெற்று வருகின்றது...

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக நெதர்லாந்தில் இருந்து வருகை தந்திருந்த  திருவாளர் மவுஸ் அவர்களும் ம.து.ம.சங்கத்தின் தலைவர் அருட்பணி அல்மன் இராஐசிங்கம் இவர்களோடு சங்க நிhவாகிகள் பொதுநிலையினர் கலந்து கொள்ள மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடபெற்றது சிற்றுண்டியும் மதிய உணவும் மாணவமாணவிகளுக்கு வழங்கப்பட்டதோடு நிதிபங்களிப்பு செய்யும் மவுஸ் அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது…














மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினரின் ஏற்பாட்டில…மாணவர்களுக்கு…. Reviewed by Author on November 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.