மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த 2028 பேர் 15 நலன்புரி நிலையங்களில் தங்கவைப்பு.-Photos
மன்னார் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக இது வரை 537 குடும்பங்களைச் சேர்ந்த 2028 பேர் பாதீக்கப்பட்டு இடம் பெயர்ந்தள்ளதாக மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இடம் பெயர்ந்த மக்கள் மன்னார் பிரதேச்ச செயலாளர் பிரிவில் 12 நலன்புரி நிலையங்களிலும்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 3 நலன்புரி நிலையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் பாதீக்கப்பட்ட பலர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் தீவுப்பகுதியில் தற்போது அதிகலவான வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனால் பல வீடுகளினுள் நீர் தேங்கியுள்ளது.இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதீக்கப்பட்டுள்ளது.எனினும் மன்னாரில் இன்று(16) காலை முதல் மழை பெய்யாத நிலை காணப்படுவதினால் மக்கள் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
-தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க மன்னார் மாவட்டச் செயலகம்,மற்றும் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு உலர் உணவுகளும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மன்னாரில் உள்ள பிரதான வீதிகள் பல சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்த 2028 பேர் 15 நலன்புரி நிலையங்களில் தங்கவைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 16, 2015
Rating:

No comments:
Post a Comment