அண்மைய செய்திகள்

recent
-

கைதிகள் ஆபத்தான நிலையில்! வடக்கு முதல்வர் கொழும்புக்கு திடீர் விஜயம்!


கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியும் அரச தரப்பிலிருந்து இதுவரையில் எந்தவித பதிலும் கிடைக்காமையால் வடக்கு முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரன் கொழும்புக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

தாமதாமாகும் ஒவ்வொரு நிமிடமும் கைதிகளுக்கு உயிராபத்து ஏற்படும் என்ற அச்சநிலை காரணமாக வடக்கு முதல்வர் கொழும்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு திடீர் விஜயத்தை மேற்கொண்ட வடக்கு முதல்வர் சகல தரப்பினருடனும் தொலைபேசி வாயிலாக கைதிகளின் நிலைமை தொடர்பில் அவசர அவசரமாக உரையாடிக்கொண்டிருப்பதாகவும், இவரது விஜயத்தின்போது வெளிநாட்டு பிரதிநிதிகளும் உள்ளடங்கியிருப்பதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ் விஜயம் தொடர்பான மேலதிக தகவல்களும் கைதிகளின் தற்போதைய நிலைமை தொடர்பான விபரங்களும் உடனுக்குடன் இணைக்கப்படும்.
கைதிகள் ஆபத்தான நிலையில்! வடக்கு முதல்வர் கொழும்புக்கு திடீர் விஜயம்! Reviewed by NEWMANNAR on November 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.