கண்ணாடியாலான அடித்தளத்தை கொண்ட தொங்கு பாலத்தில் யோகாசனம்...
சீனாவைச் சேர்ந்த 100 யோகாசனக் கலைஞர்கள் 590 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்ணாடியாலான அடித் தளத்தைக் கொண்ட அச்சமூட்டும் தொங்கு பாலத்தில் யோகாசனப் பயிற்சிகளில் ஈடுபட்டு புதுமை படைத்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த யோகாசன நிகழ்வு குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஹுனான் மாகாணத்தில் யுயயாங் நகரிலுள்ள ஷினியுஸாயி தேசிய புவியியல் பூங்காவிலுள்ள பாலத்தில் நின்றவாறு மேற்படி யோகாசன கலைஞர்கள் இவ்வாறு யோகாசன பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் யுன்தாயி மலைப் பகுதியில் 3,540 அடி உயரத்தில் அந்தரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடியாலான அடித்தளத்தைக் கொண்ட நடைபாதையில் வெடிப்பு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சம்பவம் இடம்பெற்று சரியாக ஒரு மாதத்தில் இந்த துணிகர யோகாசன நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த யோகாசன பயிற்சியின் போது தாம் உறுதியான தரை மேற்பரப்பில் நின்று யோகாசனங்களை செய்வது போன்று கற்பனை செய்தவாறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக இந்தப் பயிற்சிகளில் பங் கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்ணாடியாலான அடித்தளத்தை கொண்ட தொங்கு பாலத்தில் யோகாசனம்...
Reviewed by Author
on
November 10, 2015
Rating:
Reviewed by Author
on
November 10, 2015
Rating:


No comments:
Post a Comment