உதவும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 8வது இடம்....
இல்லாதவர்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 2014ம் ஆண்டைக் காட்டிலும் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளது
அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் இந்தப் பட்டியலின்படி இலங்கை இல்லாதவர்களுக்கு உதவுவதில், 8வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது
2014ம் ஆண்டு இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது.
ஏனைய நாடுகளுக்கு உதவுவதில் அமெரிக்கா முன்னிற்கின்ற போதும், தரப்பட்டியலில் மியன்மார் முதலிடத்தை பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது..145 நாடுகளின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தரப்படு;த்தலில், நியூஸிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா என்பன அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா, 106வது இடத்தையும், பாகிஸ்தான் 94வது இடத்தையும் பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான், 84 இடத்தையும் நேபாளம் 76 வது இடத்தையும் பூட்டான் 17வது இடத்தையும் பெற்றுள்ளன. பங்களாதேஸ் 95வது இடத்தையும் பெற்றுள்ளன.
உதவும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 8வது இடம்....
Reviewed by Author
on
November 10, 2015
Rating:
Reviewed by Author
on
November 10, 2015
Rating:


No comments:
Post a Comment