தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தார்மிக அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குங்கள்-மன்னாரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறைகூவல்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தார்மிக அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை மன்னாரில் அறைகூவல் விடுத்துள்ளது.
-இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னாரில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
-கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகின்ற எமது உறவுகளை எது வித நிபந்தனைகளும் இன்றி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செ;யய வேண்டும் என்பதனை நாங்கள் வழியுறுத்துகின்றோம்.
-எமணுது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வழியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கில் பூரண கதவடைப்பு பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.
-இவ் அழைப்பை தார்மிக அடிப்படையில் ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தக சங்கம்,தனியார் போக்குவரத்துச் சங்கம்,அரச சார்பற்ற நிறுவங்கள் எமது அழைப்பை ஏற்று மனிதாவிமான அடிப்படையில் பங்காளராக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு-மன்னார் மாவட்டத்தில் விடுத்துள்ள துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-இதே வேளை வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினரினால் நாளை வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ள ஹர்த்தால் மன்னாரிலும் அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடும் விசேட லந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை மன்னார் மீன் பிடி போக்குவரத்து அமைச்சின் உப அலுவலகத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதி நிதிகள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தார்மிக அடிப்படையில் ஒத்துழைப்பு
வழங்குங்கள்-மன்னாரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அறைகூவல்.
Reviewed by Admin
on
November 12, 2015
Rating:
Reviewed by Admin
on
November 12, 2015
Rating:




No comments:
Post a Comment