மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரையில் இளம் குடும்பஸ்தரின் கழுத்தில் உடைந்த போத்தலினால் குத்தப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதி-சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு.
மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உடைக்கப்பட்ட கண்ணாடி போத்தல் ஒன்றினால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் தழ்வுபாடு கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை(5) இரவு இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் கட்ற்தொழிலில் ஈடுபடும் ஒரு பிள்ளையின் தந்தையான பர்ணாவாஸ் ஜேசுராஜா மீயைஸ்( வயது-29) எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உடைக்கப்பட்ட கூறிய போத்தலினால் குத்தப்பட்டு ஆபத்தான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ தினமான கடந்த வியாழக்கிழமை(5) இரவு குறித்த நபரும்,அவருடைய இரண்டு நண்பர்களும் தாழ்வுபாட்டு கடற்கரைப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது குறித்த கடற்கரைப்பகுதியில் மது போதையில் தகராதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தாழ்வு பாட்டு கிராமத்தைச் நபர் ஒருவரே குறித்த இளம் குடும்பஸ்தரின் கழுத்துப்பகுதியில் உடைந்த போத்தல் ஒன்றினால் கடுமையாக குத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
-இதனைத்தொடர்ந்து குறித்த இளம் குடும்பஸ்தர் உயிருக்கு போராடிய நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
-குறித்த சம்பவம் தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் குறித்த நபரை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மீது மன்னார் நீதிமன்றத்தில் பல வளக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரையில் இளம் குடும்பஸ்தரின் கழுத்தில் உடைந்த போத்தலினால் குத்தப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதி-சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
November 12, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 12, 2015
Rating:


No comments:
Post a Comment