காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்படும் போது அது காலப்போக்கில் மரணச்சான்றுதலாக அமையக்கூடாது-ஐ.நா.பிரதிநிகளிடம் வலியுறுத்தல்.
மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ள வருகை தந்த ஐ.நா.அதிகாரிகள் குழு இரண்டு கட்டங்களாக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளுவதற்கு நேற்று புதன் கிழமை(11) மாலை மன்னார் வருகை தந்த ஐ.நா அதிகாரிகள் குழு மன்னார் கீரி ஞானோதய மண்டபத்தில் தமது விசாரனைகளை பதிவு செய்துள்ளனர்.அவர்கள் இரண்டு கட்டங்களாக தமது விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு பிரிவினர் காணாமல் போனவர்களின் உறவினர்களோடும்,மற்றைய பிரிவினர் சிவில் சமூகத்தினருடனும் விசாரனைகளை மேற்கொண்டனர்.காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 பேரூம்,சிவில் சமூகம் தொடர்பாக 8 பேரூம் கதைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.
இத்தோடு காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்கள் 50 பேர் விசாரனைகள் இடம் பெற்ற மண்டபத்தினுள் இருக்க அனுமதிக்கப்பட்டதோடு ஏனைய காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்கள் மண்டபத்திற்கு வெளியில் இருப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டது.
ஐ.நா.அதிகாரிகள் குழு எங்களிடம் கலந்துரையாடிய போது நாங்கள் அவர்களுக்கு சில திட்டங்களை முன் வைத்துள்ளோம்.எங்களினால் சேகரிக்கப்பட்ட காணாமல் போன 4700 பேரூடைய பெயர் விபரங்களை அவர்களிடம் நாங்கள் கையளித்தோம்.எங்களினால் சேகரித்த விபரங்களையே கையளித்தோம்.இன்னும் பலருடைய விபரங்கள் சேகரிக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விசாரிக்கும் ஐ.நா.குழுவிற்கு அனுப்பப்படுகின்ற தகவல்கள் மீண்டும் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகின்றது.
அந்த அரசாங்கம் பதில் அளிக்கின்ற போது பொய்யான தகவல்களை வழங்குகின்றனர்.
குறிப்பான ஒருவருடைய வழக்கு தொடர்பாக விசாரனை குறித்த ஒரு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கள் செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறுகின்ற போது அதனை நாங்கள் விசாரித்த போது அவ்வாறான வழக்குகள் எவையும் குறித்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.அதனை நாங்கள் அவர்களிடம் எடுத்துக்கூறினோம்.
மேலும் காணாமல் போனவர்களை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்றும்,இன்னும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாது இயங்கிக்கொண்டுள்ளது என்றும் நாங்கள் கூறியுள்ளோம்.ஆணைக்குழுவில் பல குறைபாடுகள் உள்ளதை எடுத்துச் சென்னோம்.
-மேலும் தற்காலிகமாக ஐ.சி.ஆர்.யினால் மக்கள் மத்தியில் சென்று வாழ்வாதாரமும்,உளவியல் தொடர்பிலான கருத்துக்களை நடத்தப்போவதாகவும் காணாமல் போனவர்களுக்கான சன்றுதல்கள் கொடுக்கப்போவதாகவும்,எங்களிடம் கலந்துரையாடினார்கள்.
அதற்கு நாங்கள் அவர்களிடம் கூறினோம் கலந்துரையாடல்கள் எல்லாம் நீதியை நிலை நாட்டுவதை குழப்பக்கூடாது.அல்லது இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதை குழப்பக்கூடாது என தெரிவித்தோம்.
-காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்படும் போது அது காலப்போக்கிலே மரணச்சான்றுதலாக அமையக்கூடாது.
எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அத்தாட்சிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னர் இங்குள்ள சிவில் அமைப்புக்கள்,மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடும் கலந்துரையாடி இவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டும் என நாங்கள் ஐ.நா.பிரதிநிதிகள் குழுவிடம் வலியுறுத்தியதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
November 12, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 12, 2015
Rating:

No comments:
Post a Comment