சமூக சுகாதார ஊக்குவிப்பு பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரிக்கை: சாள்ஸ் நிமலநாதனிடம் மகஜர் கையழிப்பு
மன்னார் பொதுவைத்தியசாலையில் பணியாற்றும் சமூக சுகாதார ஊக்குவிப்பு பணியாளர்கள் நீண்டகாலமாக சம்பளம் எதுவும் இன்றி மன்னார் பொதுவைத்தியசாலையில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கும் இவர்கள் தமக்கு நியாயமான முறையில் கிடைக்கவிருந்த நியமனங்களை அமைச்சர் ஒருவரின் (றிசாட் பதீயூதின்) அரசியல் தலையீடு காரணமாக வேறுநபர்களுக்கு வழங்கியுள்ளதால் தாம் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக நேற்று புதன்கிழமை (11) தமிழ் அரசு கட்சியின் மன்னார் கிளை அலுவலகத்திற்கு சென்ற பாதீக்கப்பட்ட சமூக சுகாதார ஊக்குவிப்பு பணியாளர்கள் தமது நிலை தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்
இது தொடர்பாக தெரியவருவது
2010ம் ஆண்டு முதல் சமூக சுகாதார ஊக்குவிப்பு பணியாளர்களாக சம்பளமின்றி 36 பேர் மன்னார் பொது வைத்தியசாலையில் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் 2010 ம் ஆண்டு தொண்டராக இணைந்து சம்பளம் எதுவுமின்றி பணியாற்றிய இவர்களுக்கு. 2011ம் ஆண்டு ஒரு வருடகாலத்திற்கான கொடுப்பனவாக மாதம் ஒன்றிற்கு ஆறாயிரம்ரூபாய்கள் என வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2012ல் குறித்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் 2012 முதல் இன்றுவரை சம்பளமின்றி தொண்டர்களாகவே பணியாற்றிவருகின்றனர்.
குறித்தவிடயம் தொடர்பாக சம்பந்தபட்ட வட மாகாண சுகாதார அமைச்சர்; மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றிருந்தபோது விரைவில் நிரந்தர நியமனம் வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கபட்டிருந்தபோதும் இன்று வரை இவர்களுக்கான நிரந்தர நியமனங்கள்; வழங்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் ஒருவரின் (றிசாட்பதீயூதினின்) ஆதரவாளர்கள் என தெரிவிக்கபடும் நபர்களுக்கு அரசியல் தலையீடுகாரணமாக முறைகேடான வகையில்; நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கவலை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே பணியாற்றி வந்த சமூக சுகாதார ஊக்குவிப்பு பணியாளர்கள் 36 பேரும் புறக்கனிக்கபட்டு அரசியல் செல்வாக்கு அடிப்படையில் குறித்த பதவிக்கான நியமனங்கள் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சமூக சுகாதார ஊக்குவிப்பு பணியாளர்களாக பணியாற்றி நிர்கதியான நிலையில் இருக்கும் பாதீக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இவர்களில் பலர் பெண்களை தலைமைத்துவமாக கொண்டவர்களாக உள்ளனர். எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நியாயமாக தமக்கு வழங்கப்படவேண்டிய நியமனங்களை பெற்றுதருமாறு மகஜர் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிமலநாதனிடம் வழங்கியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கவனத்தில் எடுத்துக்கொண்டதுடன் விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர்;, சம்பந்தபட்ட அமைச்சர் மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார்
எனவே இதனை நிவர்த்தி செய்து நீண்டகாலம் பணியாற்றிய 36 சமூக சுகாதார ஊக்குவிப்பு பணியாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கபடவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
November 13, 2015
Rating:

No comments:
Post a Comment