மன்னாரில் இரண்டு கவனயீர்ப்பு பேரணிகள் - 10-12-2015
சர்வதேச மனித உரிமைகள் தினமனா 10-12-2015 இன்று கவனயீர்ப்பு பேரணி
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பும் மன்னார் பிரஜைகள் சபை ஒன்றியமும் இணைந்து ஒழுங்குசெய்து நடாத்தும் மாவட்டம் தழுவிய காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் வேதனைகள்அரசியல் கைதிகளின் குடும்பங்களின் துயரங்கள் பெண்கள் சிறுவர்களின் உரிமை மீறல்கள் துஸ்பிரேயங்கள் சம்பந்தமான கவன ஈர்ப்பு பேரணி இவ்வாறான பிரச்சினைகள் தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவசரமாகவும் அவசியமாகவும் தீர்வு காணப்பட வேண்டிய நிகழ்வுகளாக முன்னிலை பெறுகின்றன.
பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மையான நிலை என்ன காணாமல் ஆக்கப்பட்டோர் தொகை இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவை என தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்கள் அனைவரும் உடனடியாக அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த குடும்பங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு அழ வைக்கப்படுவார்கள்
யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அரசியல் கைதிகளுக்கான ஒரு தீர்வு எட்டப்படாமை அரசின் கையாளாகத தன்மையா? அல்லது அசமந்த போக்கா? தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது ஏன் அரசிற்கு தெரியவில்லை அரசியல் கைதிகள் பொது மன்னிப்பளிக்கப்பட்டு நிபந்தனை ஏதும் அற்ற நிலையில் விடுதலை செய்யப்பட்ட வரலாறு எமது அரசியல் வரலாற்றில் உண்டு.
பெண்கள் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களும் பாலியல் வன்முறைகளும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளன. சமூக பிரச்சினையாக உருவெடுத்து அதுவே பெரிய சவாலாக மாறியுள்ளது.
வடமாகாண கரையோரம் வாழ் மீனவர்கள் வகைதொகையற்ற இந்திய மீனவர்களின் எல்லை தாண்டி வருகின்றமையால் பலவிதமான பாதிப்புக்குள்ளாகின்றனர். வருமான குறைவு ஏமாற்றம் போன்ற துயரங்கள் ஏற்படுகின்றன. இது இரு நாடுகளின் அரசியற் பிரச்சினையாககக்கூட விருத்தியாகலாம்
இவ்வாறான மேற்கூறப்பட்ட 4 விடயங்களும் வடகிழக்கு மக்களை உளவியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளாக அமைந்துள்ளன. ஆக இவற்றுக்கான நிரந்தர தீர்வை அதி விரைவில் அரசு ஏற்படுத்தி மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இக்கவனயீர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிறைவில் மனித உரிமைகள் தொடர்பான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் கையளித்த்னர் தகுந்த நடவடிக்கை எடுக்க தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார் பின்னும் அமைதியான முறை பேரணி நடைபெற்று நிறைவுற்றது
மன்னார் பிரஜைகள் சபை ஒன்றியம்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு
மன்னார்.

Reviewed by Author
on
December 10, 2015
Rating:
No comments:
Post a Comment