அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மன்னாரை வந்தடைந்தார்.(படம்)

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூறிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று(9) புதன் கிழமை மாலை விசேட வானூர்தி மூலம் மன்னாரை வந்தடைந்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் உடல் நிலை பாதீக்கப்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

-இந்த நிலையில் ஆயர் அவர்கள் குணமடைந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து இன்று(9) புதன் கிழமை காலை விமானத்தில் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

-அங்கிருந்து ஆயர் அவர்கள் விசேட வானூர்தி மூலம் மன்னார் தாள்ளாடி விமானத்தளத்தை வந்தடைந்தார்.

-மன்னார் மாறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுடன் ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும்  அருட்தந்தை எமிழ் ராஜ் ஆகியோர் சிங்கப்பூரில் இருந்து ஆயருடன் வருகை தந்துள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

மன்னார் தாள்ளாடி விமானத்தளத்தை வந்தடைந்த மன்னார் ஆயர் அவர்களை அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகள் வரவேற்றனர்.

பின் ஆயர் அவர்கள் விசேட அம்புலான்ஸ் வண்டி மூலம் மன்னார் ஆயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மன்னார் ஆயர் இல்லம் தகவல் தெரிவித்துள்ளது.





-மன்னார் நிருபர்-

(09-12-2015)

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மன்னாரை வந்தடைந்தார்.(படம்) Reviewed by NEWMANNAR on December 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.