39 இலட்சம் ரூபா வருமானத்தினை ஈட்டிய மன்னார் நகர சபை...
மன்னார் நகர சபையினரால் கிறிஸ்மஸ் புதுவருட சந்தை கடைத்தொகுதி வருடாவருடம் குத்தகைக்கு விடப்படுவது வழக்கம்.
1200விண்ணப்பங்களில் பெறப்பட்டிருந்த போதும் 189 கடைத்தொகுதிக்கான விண்ணப்பங்களே மூடிய கேள்வி கோரல் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மன்னார் மாவட்ட வியாபாரிகளுக்கு என ஒதுக்கப்பட்ட கடைகளின் எண்ணிக்கை 33 இருந்த போதும் வெளிமாவட்ட வியாபாரிகளின் கடைத்தொகுதிக்கும் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இது வரை 139 கடைகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஏலப்பணம் 15000 ஆரம்பப்பணமாகவும் 42500 அதிகூடிய ஏலப்பணமகவும் பதிவாகியுள்ளது. கடைத்தொகுதிகள் அமைகின்ற இடங்களைப்பொறுத்து ஏலப்பணம் மாறுபடும்.
இவ்ஏலத்தின் மூலம் 39இலட்சம் வருமானம் பெறப்பட்டதோடு கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இரட்டிப்பு வருமானம் எனலாம்
இத்தொகையானது வருடத்திற்கு ஒதுக்கப்படுகின்ற நகரசபையின் மொத்த நிதியில் 3/1 பங்காகும் இவ்வருமானத்தில் இருந்து தான் துப்பரவு தொழிலாளர்கள். சிற்றூழியர்கள்.எரிபொருள்செலவு என்பன வற்றிற்கு நிதியினை பங்கிடுவதாக நகர சபைச்செயலாளர் தெரிவித்தார் அதேவேளை இவ்ஏலமானது எமது நகரசபையின் ஆனைதது ஊழியர்களின் பங்களிப்பினால் வெற்றிகரமாக நடைபெற்றது.
39 இலட்சம் ரூபா வருமானத்தினை ஈட்டிய மன்னார் நகர சபை...
Reviewed by Author
on
December 09, 2015
Rating:

No comments:
Post a Comment