45 கி.மீ பயணம் செய்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி: நெகிழ வைக்கும் சம்பவம்

பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 45 கி.மீ தூரம் பயணம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் நிவாரணப் பொருட்கள் வழங்கியது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ், கொல்லுபட்டறை வைத்துள்ளார்.
சென்னை, கடலூர் மக்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது சேமிப்பு பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண உதவியாக அளிக்க தனது கிராமத்தில் இருந்து 45 கி.மீ பயணம் செய்து திருச்சிக்கு வந்தார்.
பணமாக நிவாரண நிதி அளிக்க வேண்டாம் என்றும், பொருளாக வழங்குமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, கடைவீதிக்கு சென்று, பிஸ்கட், உடைகளை வாங்கி வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ விருப்பம் இருந்தாலும், அங்கு செல்ல முடியாத சூழலில், நிவாரண பொருட்களை கொடுத்த சுரேஷின் முயற்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.
45 கி.மீ பயணம் செய்து நிவாரணப் பொருட்கள் வழங்கிய மாற்றுத்திறனாளி: நெகிழ வைக்கும் சம்பவம்
Reviewed by Author
on
December 12, 2015
Rating:

No comments:
Post a Comment