அதிக முஸ்லிம்களை கொண்ட நாடு “இந்தியா”...
எதிர்வரும் 2050ம் ஆண்டுக்குள் உலகளவிலேயே அதிக முஸ்லிம்களை கொண்ட நாடாக இந்தியா மாறும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பியு ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தற்போதைய நிலவரப்படி அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக இந்தோனேஷியா உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
தற்போது 62 சதவீதம் முஸ்லீம்கள் ஆசிய-பசுபிக் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் பாகிஸ்தானைவிட இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்.
எனவே 2050ம் ஆண்டில் அதிக முஸ்லிம்களை கொண்ட நாடாக இந்தியா மாறும், ஐரோப்பாவின் 10 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக முஸ்லிம்களை கொண்ட நாடு “இந்தியா”...
Reviewed by Author
on
December 12, 2015
Rating:

No comments:
Post a Comment