அண்மைய செய்திகள்

recent
-

சவூதியில் பணிப்பெண் மரணம் : தவிக்கும் கணவன், மகள், தந்தை


மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்குடாவைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவரின் மனைவி ஜெனிட்டா (வயது 29)  சவூதியில் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தாம் பெரிதும் துன்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக ராஜ்மோகன் தெரியவருவதாவது,

ராஜ்மோகன் ஜெனிட்டா (வயது  29) எனும் ஒரு பிள்ளையின் தாயான எனது மனைவி கடந்த 29.10.2015ம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலமாக சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

வெளி நாட்டுக்குச் சென்ற அன்று தொலைபேசியில் தனது குடும்ப உறவினர்களுடன் தொடர்பு கொண்டு தான் சவுதி வந்து சேர்ந்து விட்டதாகவும் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போது கதைப்பதாகவும் கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

29.10.2015ம் திகதி இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு வீட்டுப் பணிப்பெண்னாக சென்றவர் 26.11.2015ம் திகதி மரணமடைந்து விட்டார் என்று சவூதியில் இருக்கும் ஜெனீட்டாவின் சகோதரரான ஜெயரூபன் தொலைபேசியில் தெரிவித்ததன் பின்னர்தான் ஜெனீட்டா மரணித்த செய்தி எங்களுக்குத் தெரியும் என்றார்.

எனக்கு ஐந்து பிள்ளைகள். அதில் மரணமடைந்த ஜெனீட்டா மற்றுமே பெண் பிள்ளை எனக்கிருந்த ஒரே ஒரு பெண் பிள்ளையையும் இழந்து அவரது மரணச்சடங்கினை நடத்த முடியாமல் தவிக்கிறேன் என்று ஜெனீட்டாவின் தந்தை வேதநாயகம் ராஜ்மோகன் (வயது  53) குறிப்பிட்டார்.

சவூதியில் பணிப்பெண் மரணம் : தவிக்கும் கணவன், மகள், தந்தை Reviewed by Author on December 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.