இலங்கைக்கு இயற்கையின் ஆபத்து...? ஐ.நாவின் எச்சரிக்கை..!
எல்.-நினோ காலநிலை மாற்றத்தினால், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இம்முறை மழைக்காலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.
எல்.-நினோ காலநிலை மாற்றத்தினால், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இம்முறை மழைக்காலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை நீடிக்கலாம் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.
எல்-நினோ காலநிலை மாற்றம் தொடர்பாக நேற்று ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. பொருளாதார மற்றும் ஆசியாவுக்கான சமூக ஆணையம் மற்றும் பசிபிக்-ஆசிய-ஆபிரிக்க நாடுகளுக்கான ஒருங்கிணைந்த அனர்த்த எச்சரிக்கை மையம் சார்பில் இந்த அறிக்கையை ஐ.நா. வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு பசிபிக் கடற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு எல்-நினோ என பெயரிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2015 மற்றும் 2016ல் எல்-நினோவின் பாதிப்பு மத்திய பகுதி நாடுகளில் தீவிரமாக இருக்கும்.
இலங்கை, கம்போடியா, மத்திய மற்றும் தெற்கு இந்தியா, கிழக்கு இந்தோனேசியா, மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸ், மத்திய மற்றும் வடகிழக்கு தாய்லாந்து பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை இதனால் அதிக பாதிப்பை சந்திக்கும். இங்கு பெருமழையினால் அதிகப்படியான வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
பசிபிக் தீவுகளில் உள்ள பபுவா நியூகினியா, திமோர் , வனாட்டு போன்ற நாடுகளில் வரட்சியினால் தண்ணீர் பஞ்சம், உணவு தட்டுப்பாடு ஏற்படும்.
1998ஆம் ஆண்டுக்கு பிறகு பெய்யாத வகையில், அதிகளவு மழை 2016ஆம் ஆண்டு பெப்ரவரி வரை நீடிக்கலாம்.” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி-
காத்திருக்கிறது அழிவு! இந்தியா, இலங்கையில் பேய் மழை! ஐ.நா எச்சரிக்கை
இலங்கைக்கு இயற்கையின் ஆபத்து...? ஐ.நாவின் எச்சரிக்கை..!
Reviewed by Author
on
December 12, 2015
Rating:
Reviewed by Author
on
December 12, 2015
Rating:


No comments:
Post a Comment