அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காட்டுப்பள்ளி பிரதான வீதியில் வடிகாலமைப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தினால் மக்கள் பாதிப்பு-(படங்கள் இணைப்பு)

மன்னார் மூர்வீதி,காட்டுப்பள்ளி வாசல் பிரதான வீதியில் கழிவு நீர் வடிகான் அமைக்கப்பட்டு வருகின்ற போதும் குறித்த வீதிக்கு நடுவில் வடிகான்; அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதினால் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

யுனெப்ஸ் (U.N.O.P.E.S.)  எனும் நிறுவனத்தினால் மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் கழிவு நீர் வடிகான் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த வடிகான் காட்டுப்பள்ளி வாசல் பிரதான வீதிக்கு அருகாமையிலும் அமைக்கப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த வீதியின் நடுவில் மூடப்பட்ட கழிவு நீர் வடிகான் அமைப்பதற்காக பாரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு பள்ளம் மூடப்பட்டுள்ள போதும் மேலும் ஒரு பள்ளம் மூடப்படாது பாதுகாப்பற்ற விதத்தில் காணப்பட்டுள்ளது.

இன்று(14) திங்கட்கிழமை இரவு குறித்த வீதியால் பயணித்த சிலர் குறித்த பள்ளத்தில் விழுந்து சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்தே அப்பகுதியில் இரவு நேரத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய நபர் ஒருவர் குறித்த பள்ளத்தை அடையாளப்படுத்தி மஞ்சல் நிற நாடாவை  கட்டி அடையாளப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த வீதியூடாக போக்கு வரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாற்றுப்பாதை எவையும் அமைக்கப்படாமல் வீதி முழுமையாக  தோண்டப்பட்டுள்ளதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக உடனடியாக மன்னார் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

(மன்னார் நிருபர்)
(14-12-2015)








மன்னார் காட்டுப்பள்ளி பிரதான வீதியில் வடிகாலமைப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தினால் மக்கள் பாதிப்பு-(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on December 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.