அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'நாம் மாற்றுவோம் 'எனும் தொனிப்பொருளில் தேசிய பிரச்சாரம்.(படங்கள் இணைப்பு)

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த 'நாம் மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கு எதிரான வண்முறைகளை ஒழிக்கும் செயல் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (4) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது.

பெண்களுக்கு எதிரான வண்முறைகளை ஒழிக்கும் வகையில் 16 நாள் செயல்வாதத்தினை முன்னிட்டு குறித்த செயல் திட்டம் மன்னாரில் இன்று(4) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
இதன் போது பெண்களுக்கு எதிரான வண்முறைகளின் போது குறிப்பாக பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு துரிதமாகவும்,சமத்துவமாகவும் நீதி கிடைக்க வேண்டும்.
பொது மற்றும் வேலைத்தளங்களில் பெண்கள் , சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவை இல்லாமல் செய்வதற்கான சமூக மற்றும் அரச கட்டமைப்பினை மேம்படுத்துதல் போன்ற கருப்பொருளை மையமாக முன் வைத்து குறித்த செயல் திட்டம் இடம் பெற்றது.
இதன் போது கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் இணைப்பாளர் புகாரி முஹமட்,பெண்கள் அபிவிருத்தி தொடர்பான கருத்துறையாளர் சுரேக்கா,மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் பணியாளர்கள்,மன்னார் மாவட்டத்தில் உள்ள பெண்கள்,மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதி நிதிகள், மற்றும் மீனவ சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


(மன்னார் நிருபர்)

(4-12-2015)






.
மன்னாரில் 'நாம் மாற்றுவோம் 'எனும் தொனிப்பொருளில் தேசிய பிரச்சாரம்.(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on December 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.