அடம்பன் புளியங்குளம் அரசடி சித்திவிநாயகர் தேவஸ்தானத்திற்கு பொருட்கள் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)
மன்னார் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள புளியங்குளம் அருள் மிகு அரசடி சித்திவிநாயகர் தேவஸ்தானத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலா நிதி ஜீ.குணசீலன் தனது பண்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை நேற்று வெள்ளிக்கிழமை(4) மாலை கையளித்தார்.
புளியங்குளம் அருள் மிகு அரசடி சித்திவிநாயகர் தேவஸ்தானத்திற்கு பல்வேறு தேவைகள் உள்ளதாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலா நிதி ஜீ.குணசீலன் தனது பண்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட கோவிலுக்கு தேவையான அன்னதானம் மற்றும் சமையல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் கிரிஸ்கந்த குமார்(அன்ரன்), கோயில் பூசகர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(5-12-2015)
புளியங்குளம் அருள் மிகு அரசடி சித்திவிநாயகர் தேவஸ்தானத்திற்கு பல்வேறு தேவைகள் உள்ளதாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலா நிதி ஜீ.குணசீலன் தனது பண்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட கோவிலுக்கு தேவையான அன்னதானம் மற்றும் சமையல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் கிரிஸ்கந்த குமார்(அன்ரன்), கோயில் பூசகர் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(5-12-2015)
அடம்பன் புளியங்குளம் அரசடி சித்திவிநாயகர் தேவஸ்தானத்திற்கு பொருட்கள் கையளிப்பு-(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
December 06, 2015
Rating:

No comments:
Post a Comment