அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணத்தில் திறமையின் தேடல்---விருது விழா---2016 முழுமையான படத்தொகுப்பு



ஊடகத்துறையில் மாணவர்கள் தமது திறமையினை நிரூபித்து 03 மாத வெகுசன ஊடக கற்கை நெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் நினைவுச்சின்னமும் வழங்கும் நிகழ்வு இன்று 10-01-2016 காலை 09 மணியளவில் வவுனியா நகரமண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரின் சகோதரர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் பாராளுமன்ற மற்றும் வடமாகாண சபை  உறுப்பினர்களின் பிரதிநிதிகள் செயலாளர்கள் அதிகாரிகளுடன் வவுனியா நகரசபைச்செயலாளர் மற்றும் கல்விப்பணிப்பாளர்கள் உயர் அதிகாரிகள் விசேட விதமாக இலங்கையின் முன்னணி ஊடகங்களான சூரியன்-சக்தி-தென்றல்-வசந்தம்- இன்னும் பல ஊடகங்களின் நிகழ்ச்சி முகாமையாளர்கள் பணிப்பாளர்கள் வடக்கு ஊடககற்கை கல்லூரியின் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் வடக்கு ஊடககற்கை கல்லூரி(North Mass Media College) lanka voice சத்தம் fm நேரலை சத்தியம் நியூஸ் இம்மூன்றினதும் நிறைவேற்றுப்பணிப்பாளரும் சமாதான நீதவானுமாகிய அபுதாகிர் நபீஸ் அவர்கள் தனதுரையில் வடக்கு ஊடககற்கை கல்லூரியானது 2012-05-01 ஆரம்பித்த போதும் இலங்கை தகவல் தொழில்நுட்ப அமைச்சின் அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக 2013-05-01 அன்று ஊடக கற்கைக்கான ஒரே தமிழ் கல்லூரியாக வடக்கில் காணப்படகின்றது.

எமது கல்லூரியின் ஊடக கற்கைநெறியின் பிரதான பாடப்பிரிவுகளாக வானொலி-விளம்பரம் -சந்தைப்படுத்தல் -ஒளிப்பதிவு-பத்திரிகை-Social Media(சமூக ஊடக கற்கை )என்ற 06 பாடப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்ததே Diploma In Mass Media கற்கை நெறியாகும்.

ஏனைய விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக...
 ஊடகத்துறையானது மிகவும் கடினமானதும் பாரிய சவால் மிக்கதுமான அதே நேரத்தில் புனிதமானதும் சமூதாயத்தை நாட்டை கடடியெழுப்புகின்ற தார்மீகப்பெறுப்புடைய ஒரு துறையாகும்.  ஊடகத்துறையானது ஒரு நாடடின் மூன்றாவது கண்ணாகவும் ஐனநாயகத்தின் நான்காவது தூணாகவும் உள்ளது.
ஊடகவியலாளன் விருப்பு வெறுப்புகளற்று பொது நிலையானவனாக உண்மைகளை எந்த நிலையிலும் உரக்கச்சொல்பவனாக நாட்டின் அரணாக இருக்கின்ற ஊடகவியலாளர்கள் படும் துன்பங்கள் வேதனைகள் என்பனவற்றை இலகுவாக வெளிபடுத்தும் விதமாக கனவுகள் மெய்ப்படும் எனும் நாடகத்தினை வவுனியா கலைஞர்களால் மேடையேற்றப்பட்டது.  அத்தோடு நாட்டிய நடனங்கள் பாடல்கள்  கலைநிகழ்வுகள் என்பன சிறப்பாக நடைபெற்றதுடன் விழாவிற்கு அழைக்கப்பட்டவர்களில் சிறப்பு மற்றும் பிரதான விருந்தினர்களுக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 கற்கைநெறியினை நிறைவு செய்த 84 மாணவர்களில் மன்னாரில் இருந்து கற்கைநெறியினை நிறைவு செய்த 22 மாணவர்களில் 06 மாணவர்கள் சிறந்த மாணவர்களுக்கான நினைவு சின்னத்தினைப்பெற்றுக்கொண்டனர். அத்தோடு மன்னார் மாவட்டத்தின் இருந்து சூரியன் பண்பலையின் நிகழ்ச்சி முகாமையாளரான S-N-டிலான் சிறப்புரையாற்றியதோடு நினைவுச்சின்னத்தினையும் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பை யுவன் மற்றும் தயானி வழங்க நன்றியுரையுடன் இறுதி நடனத்துடன் நிறைவுற்றது.
















































 

வடமாகாணத்தில் திறமையின் தேடல்---விருது விழா---2016 முழுமையான படத்தொகுப்பு Reviewed by Author on January 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.