மன்னாரில் 22-01-2016 அன்று நடந்த பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 07 பேர் கைது நகையும் பணமும் மீட்பு...
மன்னார் எழுத்தூர் கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட வீடு ஒன்றினுள் 22-01-2016 வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீட்டில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை,பணம் மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடைபெற்று 04 நாட்களுக்குள் மன்னார் பொலிசாரின் அதிரடி நடவடிக்கையால் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான 07 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,
பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் புத்தளம் கற்பிட்டி புதுக்குடியிருப்பு எருக்கலம்பிட்டி மன்னாரை சேர்ந்தவர்களாவர் இவர்கள் இப்பாரிய திருட்டுச்சம்பவத்துக்கு பயன்படுத்திய NPUK- 4581 இலக்கமுடைய 180 CC பல்சர்மோட்டபைக்கினையும் NAAW -1428 இலக்கமுடைய பச்சைக்கலர் ஆட்டோவினையும் பயன்படுத்தியே திருட்டுச்சம்பவத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இக்கொள்ளையார்கள்களிடம் இருந்து நகைகள் பணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டது அதன் விபரங்கள் வருமாறு
90000 ஆயீரம் பெறுமதியான சங்கிலி - 02
135000 ஆயீரம்பெறுமதியான ஒரு காப்பு 03பவுண்
70000ஆயீரம்பெறுமதியான 1 1/2 பவுண் சங்கிலி
135000 ஆயீரம்பெறுமதியான ஒரு சோடி காப்பு 03 பவுண்
தாலிக்கொடி அடங்கலாக 2இலட்சத்தி16000 ஆயீரம்பணமும் கையடக்கதொலைபேசிகள் எல்லாம் சேர்த்து 11இலட்சத்தி 47000 ரூபாய் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியட்சகர் W.M. விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பிற்கு அமைய குற்றப்புலனாய்வு பொலிஸ் அதிகாரி P.R.சரத் அவர்களின் தலமையில் மன்னார் மாவட்ட போதைவஸ்து தடுப்புப்பிரிவுபொறுப்பதிகாரி F.Y அபய சுந்தர அவர்களுடன் 89049 இலக்கமுடைய சசிக்குமார் பொலிஸ் அதிகாரியின் தகவலுக்கமைய சி.சியந்த பீரிஸ் அயந்த ரொட்டிக்கே கேரத்த முனசிங்க திசாநாயக்க பொலிஸ் அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் திருட்க்கும்பல் சிக்கியது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான 07 பேரையும் உடல் பரிசோதனையின் பின் நீதவான் முன்னிலையில் மேலதிக விசாரனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மன்னாரில் 22-01-2016 அன்று நடந்த பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 07 பேர் கைது நகையும் பணமும் மீட்பு...
Reviewed by Author
on
January 26, 2016
Rating:
No comments:
Post a Comment