தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதி புகையிரத வீதி பாதுகாப்புக்கடவை காவலாளி பலி.(படங்கள் இணைப்பு)
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று புதன் கிழமை இரவு பயணித்த புகையிரதத்தில் மோதி புகையிரத வீதி பாதுகாப்பு கடவையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புதுக்கமம் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட தேத்தாவாடி மதுரங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் சிவகுமாரன்(வயது-36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-குறித்த நபர் உயிலங்குளம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தேத்தாவாடி மதுரங்குளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத வீதி பாதுகாப்புக் கடவையில் காவலாளியாக கடமையில் ஈடுபட்டு வருகின்றார்.
-உயிலங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள குறித்த புகையிரத கடவையில் கடந்த காலங்களில் பொலிஸார் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
-தற்போது பொலிஸாரினால் தனி நபர் ஒருவர் காவலாளியாக குறித்த தேத்தாவாடி மதுரங்குளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரத பாதுகாப்புக் கடவையில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
-சம்பவ தினமான நேற்று புதன் கிழமை இரவு குறித்த காவலாளி குறித்த புகையிரத பாதுகாப்புக் கடவைக்கு அருகில் ஆழ்ந்த நித்திரையில் காணப்பட்டுள்ளார்.
இதன் போது தலைமன்னாரில் இருந்து நேற்று புதன் கிழமை இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் குறித்த காவலாளியை மோதியுள்ளது.
-இதன் போது குறித்த காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை அப்பகுதியால் சென்றவர்கள் சடலம் கிடப்பதை கண்டு உறவினர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்து.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதோடு மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
(மன்னார் நிருபர்)
(7-1-2016)

Reviewed by NEWMANNAR
on
January 07, 2016
Rating:

No comments:
Post a Comment