யுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தீர்மானம்....
வடக்கில் யுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. வடக்கு அரசியல் வாதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழல் புதிய அரசியலமைப்புக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது சுகாதார அமைச்சரும்இ அமைச்சரவை இணைப் போச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அண்மையில் பிரதமர் ரணில்விக்கிரசிங்க யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் உரையாற்றும்போதுஇ யுத்தகாலத்தில் காணாமல்போனவர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார். எனவே வடக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசின் முடிவென்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் இங்கு மேலும் பதிலளிக்கையில்இ
யுத்த காலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதன்போது வடக்கில் யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் நீண்டகாலமாக தமது உறவுகள் காணாமல் போனதால் அவர்களது குடும்பங்களை சார்ந்தோர் பல்வேறு விடயங்களில் சட்டப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
எனவே அவ்வாறான சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படும். அத்துடன் தற்போது வடமாகாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் முக்கியஸ்தகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலை அரசின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதுவிதமான தாக்கங்களையும் ஏற்படுத்தாது என தெரிவித்தார்.
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க தீர்மானம்....
Reviewed by Author
on
January 22, 2016
Rating:

No comments:
Post a Comment