உலகில் தினசரி 7,200 குழந்தைகள் இறந்து பிறக்கின்றன...
உலகில் தினசரி சுமார் 7,200 குழந்தைகள் இறந்து பிறப்பதாக செவ்வாய்க்கிழமை லான்செட் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய 5 ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வுகளின் பிரகாரம் வருடமொன்றுக்கு 2.6 மில்லியன் குழந்தைகள் இறந்து பிறக்கின்றன. அவற்றில் அரைப் பங்கு மரணங்கள் பிரசவத்தின் போது இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பிரசவத்தின் போது 1.3 மில்லியன் குழந்தைகள் மரணமடைவதாக இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
எனினும் இது 2000 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை ஆண்டு தோறும் இடம்பெற்ற மரண வீதங்களுடன் ஒப்பிடுகையில் 1000 பிறப்புகளுக்கு 24.7 இலிருந்து 18.4 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
இறந்து பிறக்கும் குழந்தைகளில் 6.7 சதவீதமானவை 35 வயதுக்கு மேற் பட்ட வயதுடைய தாய்மாருக்கு பிறந்துள்ளன. அதேசமயம் ஏழ்மையும் இந்த குழந்தைகள் இறந்து பிறப்பதில் முக்கிய பங்கை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வறிய ஆபிரிக்க சஹாரா பிராந்தியத்தில் வேறு எந்தவொரு பிராந் தியத்தை விடவும் அதிகளவில் குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன.
உலகில் தினசரி 7,200 குழந்தைகள் இறந்து பிறக்கின்றன...
Reviewed by Author
on
January 20, 2016
Rating:

No comments:
Post a Comment