இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உதவும் கையடக்க மின் அதிர்ச்சி உபகரணம்...
இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உதவும் வகையில் கையில் எடுத்துச் செல்லக்கூடிய மின் அதிர்ச்சி வழங்கும் உபகரணமொன்றை இஸ்ரேலிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அந்நாட்டின் ஷிபா மருத்துவ நிலையத்தால் மேற்படி தொழில்நுட்பம் தற்போது பரீட்சார்த்தமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
கையடக்கத் தொலைபேசி அளவான மேற்படி உபகரணம் மிகவும் சிறிய மின் அலைகளை அனுப்புவதன் மூலம் விந்தணுக்களின் உற்பத்தியையும் இயக்கத்தையும் ஒழுங்குபடுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விந்தணுக்கள் மறை மின்னேற்றத்தைக் கொண்டுள்ள நிலை யில் இந்த உபகரணம் நேர் மின்னேற்றத்தை பிரயோகிக்கிறது. இதன் மூலம் விந்தணு உற்பத்தியும் அவற்றின் செயற்றிறனும் அதிகரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேற்படி உபகரணத்தை விலங்குகளில் பரீட்சார்த்தமாக பரிசீலித்த போது அவற்றின் விந்தணுக்களின் அடர்த்தி 200 இலிருந்து 1,600 சதவீதமாக அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பரிசோதனைகளிலான வெற்றியையடுத்து ஷிபா மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் தற்போது மேற்படி சிகிச்சைத் தொழில்நுட்பத்தை குறைந்தளவான விந்த ணுக்கள் காரணமாக இனவிருத்தி ஆற்றலை இழந்த 10 ஆண்க ளிடம் பரீட்சார்த்தமாக பிரயோகித்து பரிசீலிக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர்.
இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு உதவும் கையடக்க மின் அதிர்ச்சி உபகரணம்...
Reviewed by Author
on
January 20, 2016
Rating:

No comments:
Post a Comment