மகளை வல்லுறவுக்கு உட்படுத்த உதவிய தாய்...
தனது மகளை மூன்று நபர்கள், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த உதவிய தாய் ஒருவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் ருவாந்திகா மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த பெண், பசறை பிரதேசத்தில் வசித்து வந்த போது 14 வயதான மகளை மூன்று நபர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த உதவியுள்ளார்.
இதனையடுத்து வேறு ஒரு நபருடன் வெல்லவாய பிரதேசத்திற்கு சென்று குடியேறியுள்ளார்.
பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 14 வயதான சிறுமி, உறவு முறை பெண் ஒருவர் மூலமாக சம்பவம் குறித்து காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, பெண்ணை கைது செய்வதற்காக விசேட காவற்துறை குழு வெல்லவாய பிரதேசத்திற்கு சென்றிருந்தது. எனினும் பெண் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் கிராந்துருகோட்டே பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த போது தேடுதல் நடத்தி பெண்ணை காவற்துறை கைது செய்துள்ளனர்.
சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று பேரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகளை வல்லுறவுக்கு உட்படுத்த உதவிய தாய்...
Reviewed by Author
on
January 07, 2016
Rating:
Reviewed by Author
on
January 07, 2016
Rating:


No comments:
Post a Comment