நோர்வே வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு!
நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது
இந்தச் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் மிதமான அரசியல் நகர்விற்கு தனது பாராட்டுதலை தெரிவித்ததோடு, மிதமான அரசியல் கொள்கை மூலம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், தமிழ் மக்கள் ஒன்றாக செயற்படுவதன் மூலமே ஒரு சரியான தீர்வை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு!
நோர்வே வெளிவிவகார அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் இடையில் சந்திப்பு!
Reviewed by Author
on
January 07, 2016
Rating:
Reviewed by Author
on
January 07, 2016
Rating:


No comments:
Post a Comment