அண்மைய செய்திகள்

recent
-

இந்த வருட இறுதியினுள் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும்-மன்னாரில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர.-படங்கள் இணைப்பு


மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுப்பதாக கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மன்னாரிற்கு இன்று செவ்வாய்க்கிழமை(12) வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும்,மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்தரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார் கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தில் அதன் அதன் உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்,சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,அமைச்சர் றிஸாட் பதியுதீனின் மாவட்ட இணைப்புச் செயலாளர் என் எம்.முனவ்பர் உற்பட மாவட்டத்தில் உள்ள மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மீனவர்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுகையிலேயே கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் லைலா வலை, சுருக்கு வலை,டைனமெற் வெடி பொருள் பயண்படுத்துதல்,கடலில் பற்றை வைத்து மீன் பிடித்தல்,போன்ற மீன்பிடி முறைமைகள் தடை செய்யப்பட்டுள்ளது.

-எனினும் குறித்த தடை செய்யப்பட்டுள்ள தொழில் முறைமைகளை பயண்படுத்தி பலர் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சிறு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

-பலர் இங்கு என்னிடம் முறையிட்டுள்ளனர்.எனவே தடை செய்யப்பட்டுள்ள மீன் பிடி முறைமைகளை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் முன் வர வேண்டும்.

குறிப்பாக டைனமெற் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும்,டைனமெற் வெடி பொருள் பயண்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

-தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைமைகளை பயண்படுத்தி மீன் பிடிப்பதன் மூலம் ஏனைய மீனவர்கள் பாதீப்படைகின்றனர்.

அது மட்டுமின்றி இந்திய மீனவர்கள் இலுவைப்படகுகள் மூலம்(டோலர்) எமது கடற்பிராந்தியங்களுக்குள் வருகை தந்து மீன் பிடியில் ஈடுபடுகின்றனர்.

அது எனது பிரச்சினை அல்லது உங்களின் பிரச்சினை இல்லை.எமது நாட்டுப்பிரச்சினை என நான் கருதுகின்றேன்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தங்கி இருந்தேன்.
-இதன் போது அப்பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களின் வருகையை முற்று முழுதாக நிறுத்தமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

-அந்த வகையில் இந்திய மீனவர்களின் வருகையை நேரடியாக நான் அவதானிக்க கடற்படையினரின் உதவியுடன் அப்பிரதேசத்து கடலில் சென்றேன்.

அப்போது சுமார் 100 இற்கும் அதிகமான இந்திய மீனவர்களின் இலுவைப்படகுகள் எமது கடற்பரப்பினுள் வருவதை நான் நேரடியாக அவதானித்தேன்.

-அந்த வகையில் நான் கடற்படை அதிகாரிகளிடம் அறிவுரை வழங்கினேன்.இலங்கை கடற்பிராந்தியத்தினுள் நுழைகின்ற இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றங்களில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த வருட இறுதியில் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

மன்னாருக்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் மன்னார் கோந்தைப்பிட்டி பகுதியில் மீன்பிடி இறங்கு துறைமுகம் அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










இந்த வருட இறுதியினுள் இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக நிறுத்தப்படும்-மன்னாரில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர.-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on January 12, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.