உலக கால்பந்து விருதை தட்டிச் சென்றார் மெஸ்ஸி.....
ஆர்ஜன்டீன கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கழகத்தின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்ஸி உலக கால்பந்து விருதை 5 ஆவது முறையாக தட்டிச் சென்றார்.
உலக கால்பந்து விருது விழா டுபாயில் நடைபெற்றது.
இந்த விருதைப் பெறுவதற்காக மெஸ்சி ஆர்ஜன்டீனாவில் இருந்து டுபாய் வந்திருந்தார்.
இந்நிலையில் விருதை வென்ற மெஸ்ஸி கூறுகையில்,
‘‘இந்த விருதை பெறுவது மிகவும் சிறப்பானது. ஆனால், இந்த வாய்ப்பை உருவாக்கித்தந்தவர்கள் எனது அணி வீரர்கள். இது எனக்கு மிகவும் சிறப்பான வருடமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பார்சிலோனா அணி சிறந்த அணிக்கான விருதை தட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக கால்பந்து விருதை தட்டிச் சென்றார் மெஸ்ஸி.....
Reviewed by Author
on
January 12, 2016
Rating:

No comments:
Post a Comment